Newskadai.com
தமிழ்நாடு

உடல் சூட்டைத் தணிக்க ஓடைக்குச் சென்ற இளைஞர்கள்… உற்சாக குளியலின் போது நிகழ்ந்த அவலம்…!

death
Share this:

தமிழகத்தில்  கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வருவதால்  ஆங்காங்கே அமைந்துள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் குளிக்க சென்ற மூன்று வாலிபர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்சாபுரம் அத்திதுண்டு பேமலையான் கோவில் அருகே, வியாழக்கிழமை அன்று ஓடையில் குளிப்பதற்காக கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபி, பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகிய மூவரும் பேமலையான கோவில் நீர்வீழ்ச்சிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
Death
அப்போது நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் பாறையின் மீது நின்றிருந்த மூன்று பேரும் ஓடையில் தவறி விழுந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மூவரில் இருவர் தடுப்பனையில் சிக்கி உயிரிழந்து விட்டனர். ஒருவர் மட்டும் தடுப்பணை ஒட்டை வழியே வெளியே வந்த நிலையில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இவர்களின் உடலை நேற்று காலை மீட்டனர், மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

Related posts

“கஞ்சாவா அடிக்கிற ராஸ்கல்”… கண்டித்த தாய் மாமாவை கண்ட துண்டமாக வெட்டிய இளைஞர்….!

THAVAMANI NATARAJAN

இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவித்தது பல்கலைக்கழகம்…!!

AMARA

கோவை சிறையில் ‘கைதி’ தூக்கிட்டு தற்கொலை… சாவில் ‘சந்தேகம்’ இருப்பதாக உறவினர்கள் புகார்…!

THAVAMANI NATARAJAN

இந்தியாவிலேயே முதன் முறை… எடப்பாடி அதிரடியால் கதிகலங்கும் கொரோனா…!!

THAVAMANI NATARAJAN

அக்.31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… தடைகளும் தளர்வுகளும்…!!!

MANIMARAN M

சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை… தலைமறைவான முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வை அலேக்காக தூக்கிய போலீஸ்…!

NEWSKADAI