Newskadai.com
இந்தியா

வயிற்று வலியால் துடி துடித்த இளைஞன்.. அறுவை சிகிச்சையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

Surgery
Share this:

நாம் சிறிய விஷயம் என அலட்சியப்படுத்தும் ஒவ்வொன்றும் குறிப்பிட காலத்திற்கு பிறகு பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் அவ்வப்போது வரும் வயிற்று வலியை அலட்சியம் செய்து, பிறகு படாதபாடு படுவர்கள் எண்ணில் அடங்கா. இந்தியாவை சேர்ந்த ஸ்வீட்டி குமாரி என்ற 17 வயது இளம் பெண் சில வருடங்களுக்கு முன்பு அடிக்கடி வயிற்று வலியால் துன்பப்பட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அவரது வயிற்றில் 7 கிலோ எடையுள்ள முடி, பந்தாக இருந்துள்ளது. ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு முடியை அகற்றியுள்ளனர்.

Surgery

இவரை போன்றே வயிற்று வலியால் அவதிப்பட்ட உத்திரபிரதேசம், உன்னாவோவில் உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் கரண் என்ற 18 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்து பார்தத போது, அவரது வயிற்றில் வியக்கதக்க வகையில் பொருட்கள் இருப்பது தெரிய வந்ததுள்ளது.

இதனை அடுத்து அவருக்கு அருவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையில் கூர்மையான ஸ்கூட்ரைவர்கள், 30 நகங்கள், கரடுமுரடான கம்பிகள், 4 தையல் ஊசிகள், போன்றவை வயிற்றில் இருப்பதை கண்டு மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கரணின் தந்தை கூறுகையில் கரண் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான், ஆனால் இத்தனை பொருட்களை எப்போது விழுங்கினான் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Share this:

Related posts

ஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக சுற்றுலா… ஏழை தாயின் ஆசையை நிறைவேற்றிய அன்பு மகன்..!!

THAVAMANI NATARAJAN

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

12 மொழிகளில் தேசிய பொது தேர்வு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

THAVAMANI NATARAJAN

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

செப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு…!!

AMARA