Newskadai.com
தமிழ்நாடு

யூடியூப்பை பார்த்து இந்த இளைஞன் செய்த வேலையை பாருங்க.!!!

Arrest
Share this:

ஆன்லைனில் எவ்வளவு நல்ல விசயங்கள் இருப்பினும் ஒரு சிலர் தவறான பாதையையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், முதியோர்கள் ஆகியோரிடம் சங்கலி பறிப்பு மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

Young man arrested for burglaryமேலும் படிக்க: http://மனிதனை மிஞ்சிய மனிதநேயம்…. கொரில்லாவின் இந்த செயல்.!!!

இதனால் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பட்டாபிராம் போலீசார் மோட்டார் சைக்களில் சந்தேகப்படும்படியாக வந்த காஞ்சீபுரம் மாவட்டம், படப்பையை சேர்ந்த பிரதீப் வயது 26, மற்றும் ஜெனுசன் வயது 25 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.

Young man arrested for burglary

விசாரித்தில் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள், முதியோர்களிடம் சங்கலி பறிப்பில் ஈடுபட்டதும், பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும் இவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும், 15 பவுன் நகையும் பறிமுதல் செய்ப்பட்டது. மேலும் விசாரணையில் ஜெனுசன் இலங்கையை சேர்ந்தவர், கடந்த 2009 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சென்னைக்கு வந்து படப்பை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால் யூடியூப் மூலம் கொள்ளையடிப்பதை கற்றுக்கொண்டு திருட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்கள்.


Share this:

Related posts

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

சினிமா பாணியில் சேஸிங் செய்து… அரசு பேருந்தை ஆட்டயபோட்ட வாலிபர்…!!

THAVAMANI NATARAJAN

சினிமா பாணியில் சிலை கடத்தல்… இணைய பேரத்தில் சிக்கிய கொள்ளை கும்பல்…

MANIMARAN M

கல்லூரி இறுதி பருவத் தேர்வை தவிர அனைத்தும் ரத்து… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA

கட்டிங்கிற்கு காசு சேர்க்க கூட்டு சேர்ந்த இளைஞர்கள்….. சேலத்தில் ஜோராக நடந்த “குடி”மகன்களின் வியாபாரம்…!

THAVAMANI NATARAJAN