Newskadai.com
விளையாட்டு

நவ. 4-ல் மகளிர் T20 : கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து.. பிசிசிஐ அறிவிப்பு!

Women's T20
Share this:

கடந்த ஒரு மாத காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 2020 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்த உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டியை இந்த வருடமும் நடத்த வேண்டும் என்று இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

Women's T20

இக்கோரிக்கையின் காரணமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் போட்டி கண்டிப்பாக நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டு மூன்று அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அதே போல் இந்த ஆண்டும் சூப்பர்நோவா, ட்ரெயில்பிளைசர்ஸ், வெலாசிட்டி என்ற மூன்று அணிகளுக்கு இடையே போட்டிகள நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Women's T20

மூன்று லீக் போட்டிகளும், ஒரு இறுதிப் போட்டி என நான்கு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4, 5, 7 தேதிகளில் மூன்று லீக் போட்டிகளும், நவம்பர் 9 அன்று இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. சூப்பர்நோவா அணிக்கு ஹர்மன்பரீத் கவுர், ட்ரெயில்பிளைசர்ஸ் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் வெலாசிட்டி அணிக்கு மிதாலி ராஜ் கேப்டன்களாக இருப்பர்.

Women's T20

மேலும் இந்த போட்டிகளில் இந்திய மகளிர் வீராங்கனைகள் மட்டுமின்றி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

தொடர்ச்சியாக 5வது வெற்றி… பதற வைத்த பஞ்சாப்….!! திணறிப் போன கொல்கத்தா….!!

MANIMARAN M

அடித்து ஆடியும் பரிதாபமான தோல்வி… விரட்டிப் பிடித்து வெற்றிக் கனியை பறித்த டெல்லி…

MANIMARAN M

IPL : பேட்டிங்கில் தூள் கிளப்பிய டெல்லி – வெறியுடன் துரத்திய கொல்கத்தா

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M