Newskadai.com
விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து…. பெண்கள் T-20 போட்டியை விரைவில் நடத்த முடிவு…!!

Share this:

2020 மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சத்தின் காரணமாக சில முறை ஒத்திவைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இப்போட்டிகள் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த கனியாக பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விரைவில் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 உறுதியானதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டியை இந்த வருடமும் நடத்த வேண்டும் என்று இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையின் காரணமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் போட்டி கண்டிப்பாக நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். மேலும், “சேலஞ்சர் கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்திய வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்” அவர் கூறினார்.

மூன்று அணிகள் இடையிலான இந்த போட்டி நவம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி இருப்பின் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் அக்டோபர் மாதம் இறுதியில் அமீரகம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும், இது குறித்து இன்னும் சில தினங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டு அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…!!

AMARA

”ஐபிஎல் போட்டியிலிருந்து இதனாலதான் விலகினேன்..!!” சுரேஷ் ரெய்னா அதிரடி…!!

NEWSKADAI

2020 IPL கொண்டாட்டம் : போட்டி அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

NEWSKADAI

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய துயர சம்பவம்… IPL-லிருந்து விலகியது இதற்காக தானாம்…!

MANIMARAN M