Newskadai.com
தமிழ்நாடு

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

Share this:

நாகை மாவட்டம், ஆக்கூர், மடப்புரம் கிராமங்களை சேர்ந்த மகளிர் குழுவினர் தாங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் மயிலாடுதுறையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் மகளிர் குழுவினர் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு தனியார் நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்று அதனை நாங்கள் முறையாக செலுத்தி வந்தோம். கொரோனா பெருந்தொற்றினால் மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தி வந்தனர். இதனால் நாங்கள் வேலைவாய்ப்பை இழந்து எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியா உள்ளது. மத்திய மாநில அரசுகளும் கடன் தவணையை வசூல் செய்வதில் கடனளிக்கும் நிறுவனங்கள் நெருக்கடி தரக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் கடன் பெற்ற எங்களை கடன் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என தினமும் மிரட்டி வருகின்றனர். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மட்டுமின்றி ஏழை அப்பாவி மக்கள் பெற்ற தனிநபர் கடனையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தனியார் நிதி நிறுவனத்தினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க : http://அதிகரிக்கத் தொடங்கிவிட்டது கொரோனா… நாகை, கோவை, சேலம், மதுரையில்…

இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்கள் மற்றும் மகளிர் குழுவினரை காப்பாற்றும் வகையில் நுண் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this:

Related posts

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

ஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…!!

AMARA

சீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை… அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்…!!

MANIMARAN M

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN