Newskadai.com
தமிழ்நாடு

பூமிக்கு அடியில் பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து… கண் இமைக்கும் நேரத்தில் துடிதுடித்து இறந்த பரிதாபம்…!!

Share this:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வீடுகளில் மழை நீர் புகுதல், மரங்கள் சாலைகளில் விழுதல், பாறைகள் சாலைகளில் விழுதல் போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்துவருகிறது. இதுவரை பாதிப்புகள் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. ஆனால் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல இடங்களில் மழைநீரானது தேங்கி நிற்கிறது. குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால்  வாகணம் ஓட்டுபவர்கள் மிகவும்அவசத்தை படுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஆங்காங்கே மின்பம்பங்களில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியந்தோப்பு பெரியார் நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் அலிமா இவருக்க வயது 45. இவருடைய கணவர் ஷேக் இப்ராகிம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அலிமா தனது கணவரையும், மகணையும் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால் அந்த தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதியில் சாலையோரம் பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்வார வயர், வெளியே தெரியும்படி இருந்துள்ளது. வீட்டு வேலை செய்து பிழைத்து வரும் அலிமா. நேற்று காலை வீட்டு வேலை செய்ய நாராயணசாமி தெருவில் நடந்து சென்றுள்ளார், மழைநீரில் நடந்து வந்த அலிமா பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரை மிதித்திருக்கிறார். இந்த வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதால் அலிமா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலானது. தகவல் அறிந்த புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பலியான அலிமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கு வந்த சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பே இதே தெருவில் மின்கசிவு ஏற்பட்டு 2 பேர் பாதிக்கப்பட்டதால் பூமிக்கு அடியில் செல்லும் மின்வயரில் ஏற்படும் மின் கசிவை சரி செய்யுமாறு புகார் செய்தோம். ஆனால் அவர்கள் புகாரை பெறாமல் மின்சார வாரியத்தில் புகார் செய்யுமாறு கூறினர். அவர்களும் இது மாநகராட்சிக்கு உரிய வேலை என்று தட்டிக்கழித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்


Share this:

Related posts

மக்களே இனி புகார் மனுவை தூக்கிட்டு அலைய வேண்டாம்… உட்கார்ந்த இடத்தில் இருந்தே தீர்வை பெற முதல்வரின் புதிய திட்டம்…!!

AMARA

காசு கொழுத்துபோன நித்யானந்தா… கைலாசாவுக்கு தனி பேங்கு தெறக்கப்போறாராம்…

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

NEWSKADAI

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA