Newskadai.com
தமிழ்நாடு

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

Share this:

காரைக்கால் நேதாஜி நகரைச் சேர்ந்த பெண் தாதா எழிலரசி பல கொலை, கொள்ளை வழக்குகளிலும் புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர். திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமுவின் 2வது மனைவி எழிலரசி.

2013-ல் தொழில் போட்டி காரணமாக ராமு படுகொலை செய்யப்பட்டார். ராமு கொலை வழக்கில் அய்யப்பன் என்பவர் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ளார். ராமு கொலை செய்யப்பட்டதற்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவும், புதுச்சேரி முன்னாள் பேரவைத் தலைவர் வி.எம்.சி.சிவக்குமாரும் தான் காரணம் என எழிலரசி நினைத்துள்ளார்.

பின்னர் ஜாமினில் வெளிவந்த அய்யப்பன் மற்றும் வினோதா 2015-ல் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து வி.எம்.சி.சிவக்குமார் காரைக்கால் அருகே உள்ள நிரவி கிராமத்தில் 2017-ஆம் ஆண்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த கொலைகளில் தேடப்பட்டு வந்த எழிலரசியை காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த எழிலரசி காரைக்காலில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் எழிலரசி மீது மிரட்டல் புகார் வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நிரவி போலீசார் எழிலரசியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த எழிலரசியை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் பெண் தாதா எழிலரசி கையெழுத்திட காவல் நிலையத்துக்கு வராமல் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தலைமறைவான பெண் தாதா எழிலரசியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Share this:

Related posts

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு… இன்னும் சற்று நேரத்தில் 100 அடியை தொடப்போகும் மேட்டூர் அணை..!!

THAVAMANI NATARAJAN

தாலி சங்கலிக்காக கணவரை போட்டுத்தள்ளிய மனைவி… ஹாஸ்பிட்டலில் அவிழ்த்துவிட்ட புளூகு மூட்டைகள்…!

THAVAMANI NATARAJAN

கொரோனா வார்டில் பணிச்சுமை… சேலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் திடீர் போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

வரும் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி

THAVAMANI NATARAJAN

ஓணம் பண்டிகை : கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!!

MANIMARAN M

சேலத்தில் வீடு இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி முதியவர் பரிதாபமாக பலி…!!

THAVAMANI NATARAJAN