Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… 4வது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை…!!

suicide
Share this:

சேலத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. அந்த வகையில் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அஸ்தம்பட்டி அருகே ராஜாஜி ரோடு பகுதியில் கிருபா அபார்ட்மெண்ட் உள்ளது. இங்கு சண்முகசுந்தரம் கதவு மற்றும் ஜன்னல் மொத்த விற்பனை நிலையம் வைத்து வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி விக்னேஷ்வரி இவருக்கு வயது 40. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வது மாடியில் இருந்து சண்முசுந்தரத்தின் மனைவி விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் சண்முகசுந்தரம் அதிகாலையில் வேலைக்கு சென்று விட்டார். இவர் சென்ற சிறிது நேரத்தில் விக்னேஷ்வரி மொட்டை மாடியாக உள்ள 4 வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார். குதித்ததில் படுகாயம் அடைந்து விக்னேஷ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உதவி கமிஷனர் ஆனந்தகுமார், அஸ்தம்பட்டி போலீசார், விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் விக்னேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicide

இந்தநிலையில் விக்னேஷ்வரி மன அழுத்தத்தால் மிகவும் பாதிகப்பட்டு இருந்துள்ளார். இதற்காக கடந்த 2 வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மேலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதால் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் போலீசார் அந்த குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்துவருகிறார்கள். அதில் விக்னேஷ்வரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ காட்சி பதிவாகியுள்ளது. இதனால் அந்த வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விக்னேஷ்வரியின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்று வேறு கோணத்திலும் போலீசார் விசாராணையை தொடங்கியுள்ளனர்.


Share this:

Related posts

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

இனி டிராபிக் போலீசைப் பார்த்து பயப்பட வேண்டாம்… போனைக் காட்டிட்டு போய்ட்டே இருங்க…!!

THAVAMANI NATARAJAN

எந்த மாவட்டத்தையும் விட்டு வைக்காத கொரோனா… தமிழகத்தை வச்சு செய்கிறது..!!

NEWSKADAI

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M

திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்த் திருவிழா ரத்து…

POONKUZHALI