Newskadai.com
இந்தியா

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

Share this:

வடகிழக்கு இந்திய பகுதியில் கனமழையின் காரணமாக அசாம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், பல நூறு மக்கள் உயிரிழந்தும் உள்ளனர்.

பீகார் மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு படை(NDRF)-யைச் சேர்ந்த 21 குழுக்கள் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபரி கிராமத்தில் நீரில் மூழ்கிய வீட்டில் இருந்து 25 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரை NDRF வீரர்கள் மீட்டனர். அச்சமயத்தில் அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அப்பெண் NDRF மீட்புப் படகிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.

இது குறித்து NDRF அதிகாரி கூறும்பொழுது, என்.டி.ஆர்.எஃப் இன் 9 வது பட்டாலியன் வீரர்கள் வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இருக்கும் பொழுது, சற்று தொலைவில் கந்தக் ஆற்றின் வெள்ளநீரில் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது, உடனே அங்கு சென்ற வீரர்கள் அந்த கர்ப்பிணிப் பெண்ணை பத்திரமாக மீட்டு படகில் ஏற்றினர். மீட்பு படகில் ஏறிய மறுகணமே நிறைமாத கர்ப்பிணிக்கு பிரவச வலி ஏற்பட்டு, உடனடியாக அங்கிருந்த பெண் சமூக சுகாதாரப் பணியாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் சரியான நேரத்திற்கு வந்து சேர, அந்த பெண்ணிற்கு படகிலேயே பிரவசம் நடந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீட்பு பணிக்கு சென்றவர்களையும், அப்பகுதி மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் மோடிஹரி மாவட்டம் பஞ்சாரியா கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு தற்சமயம் இருவரும் நலமாக உள்ளதாக கூறியுள்ளார்.

2013 ஆண்டு முதல் இது போன்ற வெள்ளப் பேரிடர் மீட்பு பணிகளில் NDRF படகில் நடந்த 10 வது பிரசவம் இது என்றும், இதில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று குறிப்பிடதக்கது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


Share this:

Related posts

இந்தியாவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்… அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

சிக்கலில் வாட்சப் – தகவல்கள் சேகரிக்கப்படுமா..? அச்சத்தில் பயனாளர்கள்..!

MANIMARAN M

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI

உடனே தடை பண்ணுங்க… இல்லாவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் … வைகோ கொந்தளிப்பு!

AMARA