Newskadai.com
தமிழ்நாடு

குடியைக் கெடுத்த ‘குடி’… கணவனின் கொடுமையால் குழந்தைகளுடன் தீயிட்டு பெண் தற்கொலை…!!

Share this:

மதுரையில் மேலவாசல் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் பாண்டி தமிழ்செல்வி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் வர்ஷிகாஸ்ரீ, 2 வயதில் வர்னிகாஸ்ரீ என்று இரு பெண் குழந்தைகள். பாண்டி மாநகராட்சியில் தினக்கூலி துப்புரவு பணியாளராக செய்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான பாண்டி சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி தமிழ்செல்வியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் இரவு குடி போதையில் வீட்டுக்கு வந்த பாண்டி மனைவி தமிழ்செல்வியிடம் சண்டையிட்டுள்ளார்.

fire

அன்று நள்ளிரவு தமிழ்செல்வி தனது இரு குழந்தைகள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். ஒன்றுமறியாத குழந்தைகள் தாயின் இந்த கொடூர செயலால் அலறியுள்ளனர். தமிழ்செல்வியின் உடலிலும் தீ பிடித்ததையடுத்து அவரும் அலறியுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். தீயில் எரிந்துக் கொண்டிருந்த மூவரையும் காப்பாற்ற போராடினார். ஆனால் சம்பவ இடத்திலேயே மூத்த குழந்தை வர்ஷிகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். தமிழ்செல்வியையும், வர்னிகாஸ்ரீயையும் மீட்டு மதுரை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். தமிழ்செல்வியின் தந்தை நொண்டிச்சாமியின் புகாரின் பேரில்  திடீர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை எரித்து தன்னையும் எரித்து தற்கொலை செய்துக் கொண்ட இந்த கொடூர சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

மக்களே நாளை முழு ஊரடங்கு… எந்தெந்த கடைகள் எல்லாம் திறந்திருக்கும் தெரியுமா?

NEWSKADAI

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN

#குட்நியூஸ் : ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள்… அரசு போக்குவரத்துவக்கழகம் ஏற்பாடு..

MANIMARAN M

’பெட்டு மாறியதால் டெட் பாடியானவர்’..! அரசு மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

MANIMARAN M

வேலூரில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, மகள் வெட்டிக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

தமிழக அரசுக்கு அடுத்த பேரிடி… கொரோனாவால் பல கோடிகளை இழந்த முக்கிய துறை…!!

THAVAMANI NATARAJAN