Newskadai.com
சினிமா

ஒரே வாரத்தில் இன்னொரு தமிழ் நடிகர் கொரோனாவுக்கு பலி… அதிர்ச்சியில் திரையுலகம்…!

Share this:

கொரோனா தொற்றால் சினிமா பிரபலங்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஹாலிவுட் முதல் நம்ம ஊர் கோலிவுட் வரை பல முக்கிய பிரபலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். ஷூட்டிங் இல்லாததால் வீட்டிற்குள் முடங்கியிருந்த போதே பலரையும் கொரோனா தொற்று பதம் பார்த்தது. தற்போது படப்பிடிப்பிற்கு வேறு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் பிரபலங்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ப்ளோரண்ட் பெரைரா கொரோனா தொற்றால் காலமானார். கும்கி, தொடரி, வேலையில்லா பட்டதாரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், ஊடகத்துறையிலும் பல தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறந்து ஒரே வாரத்திற்குள் மற்றொரு தமிழ் நடிகரும் கொரோனாவின் கோரப்பசிக்கு பலியாகியுள்ளது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராகவும், எழுத்தாளர், கதையாசிரியர் போன்ற பன்முக திறமைகளை கொண்டவராகவும் விளங்கியவர் ரூபன். இவர் விக்ரமுடன் தூள் படத்தில் டி.டி.ஆர். கதாபாத்திரத்திலும், விஜய்யுடன் கில்லி படத்தில் கபடி போட்டி நடுவராகவும் நடித்துள்ளார். பிரபல எழுத்தாளரான இவர், சான்ஸ் கிடைக்கும் போது எல்லாம் படங்களில் நடித்து வந்தார்.

ரூபனுக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

ரசிகர் மன்ற பிரச்சனை: விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை…

THAVAMANI NATARAJAN

விரைவில் தியேட்டர்கள் திறப்பு?… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…!!

MANIMARAN M

மீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி… என்ன குழந்தை தெரியுமா?

NEWSKADAI

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்… கண்ணீர் விட்டு கதறி அழுத பாரதிராஜா… உருக்கமான வீடியோ….!!

NEWSKADAI

விஜய் சேதுபதிக்கு வலை விரிக்கும் பாஜக… வரித்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கும் குஷ்பு, அண்ணாமலை… பின்னணி என்ன?

NEWSKADAI