Newskadai.com
இந்தியா

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

Share this:

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு முரணாக “பி. எம்.கேர்ஸ் நிதி” இருக்கிறது என்று கூறி, சி.பி.சி.எல். என்ற தனியார் தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக இவ்வாண்டு மார்ச் 28 ல் “பி.எம். கேர்ஸ் பண்டு” என்ற நிதியத்தை பிரதமர் மோடி தொடங்கினார். தொழிலதிபர்கள், நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இதற்கு நன்கொடை வழங்கினர். ஏற்கனவே தேசிய பேரிடர் நிதியம் இருக்கையில் எந்த சட்ட திட்டத்திற்கும் உட்படாத இந்தப் புது நிதியம் எதற்கு? என்று எதிர்கட்சிகள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில் பி.பி.சி.எல் எனும் தனியார் தொண்டு நிறுவனம், பிரதமர் கொண்டுவந்த புது நிதியம் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்துக்கு முரணாக இருக்கிறது. எனவே பிஎம் கேர்ஸ் ஃபண்ட்க்கு வந்துள்ள நன்கொடைகளை தேசிய பேரிடர் நிதியத்திற்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தது. வாதப் பிரதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை என்பதால் அதிலுள்ள பணத்தை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட முடியாது எனவும், தேவைப்பட்டால் பிரதமர் அலுவலகம் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


Share this:

Related posts

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

கருப்பு பூஞ்சையை தொடர்ந்து மிரட்டும் மஞ்சள் பூஞ்சை

MANIMARAN M

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்??? முடிவு செய்யக் கூடும் காரியக் கமிட்டி…

MANIMARAN M

சல்யூட் போடு… இன்று கார்கில் வெற்றி நாள்… தீரத்தோடு போரிட்டு வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை…!!

NEWSKADAI

ரூ.1 அபராதம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…!!

MANIMARAN M

அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

AMARA