Newskadai.com
அரசியல்

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

Share this:

நடிகரும் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்சைக்குரியவாறு பேசியிருந்தார். அதில் ”அதிமுக கொடியிலிருந்து அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும். அப்போதுதான் அந்த கட்சி உருப்பட முடியும்” என பேசியிருந்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் அதிமுக தரப்பில்  இருந்து  ”அதிமுக கட்சியின்  எம்.எல்.ஏ வாக இருந்த எஸ்.வி.சேகர் மான ரோஷம் உள்ளவராக இருந்தால், 5 ஆண்டுகள் சம்பளத்தை திருப்பித் தரவேண்டும்” என்று  தெரிவித்திருந்தது.
  
இதனை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவிவரும் ஒரு வீடியோவில் எஸ்.வி.சேகர் ”சமீப காலமாக திமுக, அதிமுகவின் கொள்கை நிலைப்பாடுகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. காவியை களங்கம் என்று சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. அப்படியானால் தேசியக்கொடி களங்கமா?” என்றவாரு அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். மேலும் ”வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அந்த களங்கம் வாய்ந்த தேசியக் கொடியைத்தான் ஏற்ற உள்ளாரா? பழனிசாமி, காவியை மட்டும் தவிர்த்து விட்டு வெள்ளை மற்றும் பச்சையை மட்டும் வைத்து கொடியேற்றப் போகிறீர்களா?” என்றும் ”அதன் மூலம் கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மட்டும் போதும் இந்துக்கள் வேண்டாம் என நினைக்கிறீர்களா? உங்கள் தலைமைச் செயலகம் அறிவாலயமா?” என சர்சைக்குரிய  கேள்விகளை அடுக்கியுள்ளார்.
Sv sekar Jayakumar
இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் ”தமிழக முதலமைச்சரை அவதூறு செய்யும் வகையில் பேசியுள்ளார் அது மட்டும் இன்றி தேசிய கொடியை மதத்தோடு ஒப்பிட்டு பேசி களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார் அதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும்,  ”எஸ்.வி.சேகர்  பல நாட்களாக சிறைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்தால் அதை அதிமுக அரசு கண்டிப்பாக நிறைவேற்றும் மற்றும் அவர் மீது சென்னை போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Share this:

Related posts

நற்செய்தி..! தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்

MANIMARAN M

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்… தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றம் தகவல்…!

NEWSKADAI

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M

குட்கா வழக்கு : திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து…!!

AMARA