Newskadai.com
இந்தியா

கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.!!!

In Erode A young man killed in a dispute over pay
Share this:

காதல் ஜோடியை விட கள்ளக்காதலின் ஜோடியே அதிகரித்து வருகிறது. கள்ளக்காதலுக்காக கொலை செய்துவரும் சம்பவம் அளவில்லாமல் போகிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்த பிரதீப் வயது 32 கட்டிட தொழிலாளியான இவருக்கு ரோகினி என்பவருடன் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  பிரதீப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் பிரதீப்பிற்கும், ரோகிணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதீப் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார்.

murder

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைதுள்ளனர். வழக்குபதிவு செய்த போலீசார் அவரது மனைவி ரோகினியிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். பிரத்தீப்பின் வாயில் இருந்து ரத்தம் வந்திருந்தது, உடலில் ரத்த காயங்களும் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை கடுமையாக்கியுள்ளனர். இதில் வந்த உண்மைகள் யாதெனில் கணவரின் குடிப்பழக்கம் பிடிக்காத ரோகினி கணவரை வெகுநாட்களாக கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் மனைவியின் கண்டிப்பை கண்டுகொள்ளவில்லை, இந்த நிலையில் அவரது வீட்டிற்கு கணவரின் நண்பரான சீனிவாசன் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

murderஇதனால் ரோகினிக்கும், சீனிவாசனுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த பிரதீப் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் பிரதீப் உயிருடன் இருந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என கருதி, பிரதீப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 23 ம் தேதி இரவு குடிபோதையில் பிரதீப் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சீனிவாசனும் வந்துள்ளார்.  உன் மனைவி உன்னுடன் வாழ விரும்பவில்லை எனவே விவாகரத்து கொடுத்து விடு என சீனிவாசன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. மேலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

murderஅப்போது ஆத்திரம் அடைந்த சீனிவாசனும், ரோகினியும் சேர்ந்து பிரதீப்பின் வாயில் துணி திணித்து தாக்கியுள்ளனர். அதன் பின்னர் சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொலை செய்து, உடலை படுக்கையில் தூங்குவது போல் போர்வையால் மூடி விட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதிகாலையில் வீட்டில் இருந்து சீனிவாசன் சென்றுள்ளார். அதன் பிறகு தனது கணவர் குடிபோதையில் இறந்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து ரோகினி, சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலுக்கா கணவனை கொன்ற மனைவியின் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை படிக்க : http://மதுவென நினைத்து சானிடைசரை குடித்த மதுபோதகர்கள்… உயிருக்கு போராடும் அவலம்.!!!


Share this:

Related posts

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

“இதுவரை பக்க விளைவுகளே இல்லை”… இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து…!!

MANIMARAN M

ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்த மத்திய அரசு… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

POONKUZHALI

சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த யுபிஎஸ்சி…

MANIMARAN M

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

MANIMARAN M