Newskadai.com
அரசியல்

ஸ்டாலின் அதற்கு சரிபட மாட்டார்… துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள்… சுப்ரமணியன் சுவாமி பொளேர்…!

Share this:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தலைமைகளைக் கொண்ட அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படப்போவது யார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அமைச்சர்கள் ஆளாளுக்கு கருத்து கூற பொறுத்து பொறுத்து பார்த்த இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர் .

 

Stalin

அதில் இனி ராணுவ கட்டுப்பாடு உடன் அதிமுக இயங்கும் என்றும், தேவையில்லாமல் கருத்து கூறினால் நடவடிக்கை பாயும் என்றும் ஸ்ட்ரிட் ஆர்டர் போடப்பட்டது. மற்றொருபுறம் விநாயகர் சதுர்த்திக்கு சிலையை வீதிகளில் வைத்து வழிபடவும், ஊர்வலத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. இரு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பல விமர்சனங்களை மாறி, மாறி முன்வைத்து வருவதால் அதிமுக – பாஜக கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Stalin

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, துர்கா ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென குண்டை தூக்கி போட்டுள்ளார்.

Subramaniyam

இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, ஸ்டாலின் மனைவி தைரியமாக கோவிலுக்கு செல்கிறார், பொட்டு வைத்து கொள்கிறார். இந்தியாவில் எப்போதுமே பெண்களுக்கு தான் தைரியம் அதிகம். துர்கா ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் நானே கூட ஆதரவு கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…!

AFRIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் எம்.எல்.ஏ.வை பொறுப்பிலிருத்து தூக்கியடித்த அதிமுக தலைமை…!!

NEWSKADAI

பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை… மோடி கொடுத்த ஒற்றை அட்வைஸ்…!

AMARA

“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…!!

AMARA

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்… தமிழக அரசுக்கு அதிரடி யோசனை கொடுத்த ராமதாஸ்…!

NEWSKADAI