Newskadai.com
தேர்டு ஐ

“காதலித்து பார்”… ஆண் – பெண் நேசத்தை ஆதரிக்க பெற்றோரை தடுப்பது எது?

Share this:

“காதல்” இந்த வார்த்தையை கேட்கும் போதே இளசுகளின் காதில் தேன் வந்து பாய்ந்தது போன்று இருக்கும். ஆனால் உண்மை என்ன ஆணுக்கு எந்த பெண்ணையும் காதலிக்கவும், அவள் சம்மதிக்கவில்லை என்றால் ஆசிட் அடிக்கவும், ஏன்? கொலையே செய்ய கூட உரிமை இருக்கிறது. ஆனால் பெண்ணுக்கு தனக்கு பிடித்தவனை விரும்பவும் உரிமை கிடையாது. ஒருவனை பிடிக்காவிட்டால் உன்னை பிடிக்கவில்லை என சொல்லவும் உரிமை கிடையாது. இரு மனங்கள் இணைவதாக கூறப்படும் காதல், இந்தியாவில் மட்டும் எத்தனை விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது என உங்களுக்கு தெரியுமா?

 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மெய்பிக்கும் விதமாக இன்று ஆணுக்கு நிகராக பெண்கள் ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்கின்றன. காவல்துறை, ராணுவம், விமானம் ஓட்டுதல் என்று பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். மற்றொரு புறம் உலகையே கைக்குள் அடக்கி வைத்திருக்கும் செல்போன் ஆண், பெண் இடையிலான போதங்களை எல்லாம் கடந்து நட்பு, காதல் என பல பரிமாணங்களை மாற்ற பயன்படுகிறது.

 

இத்தகைய சூழலானது பெண்ணும்-ஆணும் ஒருவருக்கொருவர்  பழகுவதை சாத்தியமாக்குகிறது. இதனால் பெண்ணுக்கும்- ஆணுக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலிப்பதற்கும் ஏதுவான சூழலை இச்சமூகம் உருவாக்கி தந்துள்ளது. இன்று நாம் பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலும், கல்லூரி வளாகத்திலும், தொழில் செய்யும் இடங்களிலும் இளம் ஜோடிகள் காதல் செய்வதை இயல்பாக பார்க்கமுடிகிறது.

காதல் ஜோடிகளை நாம் காணும்போது பட்டாம் பூச்சி அழகாய் பறப்பது போல்…
இரவும் பகலும் சந்திக்கும் அந்த ரம்மியமான காட்சியை போல்…
வண்ண வண்ண பூக்கள் பூத்து குழுங்குவதை போல்…
கடற்கரையும் கடல் அலையும் தொட்டு விளையாடுவது போல்…
உயர்ந்த மலையை மேகம் தழுவதுபோல்…
ரம்மியமாய் தோன்றும்.

Love
Love

மேலே சொன்ன அனைத்து விஷயங்களும் நடப்பது ஏதோ சினிமா அல்லது சீரியலில் என்றால் குடும்பத்துடன் அமர்ந்து ஜாலியாக பார்த்து ரசிக்க அனைவரும் ரெடி. நாமே அந்த காதலர்களாக மாறி மெய்சிலிர்க்கின்றோம். அந்த காதல் ஜோடிகளை யாராவது பிரிக்க நினைத்தால் அவன்மீது கோபம் கொள்கின்றோம். அனைத்து தடைகளையும் கடந்து காதலர்கள் ஒன்று சேர்ந்தால் மனநிறைவு கொள்கிறோம்.

ஆனால் இதுவே காதலில் விழுந்தது நமது மகனோ, மகளோ என்றால் நம்மால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் வேறு சாதி, மதம், ஏழை – பணக்காரன் வித்தியாசம் எல்லாம் இருந்தால் கொந்தளித்துவிடுவோம். அதையும் மீறி சரி நம்ம பிள்ளை ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழட்டுமே என முடிவெடுக்க நினைத்தால், சொந்தக்காரன் என்ன சொல்வான், சாதிக்காரன் என்ன நினைப்பான் என சமூகத்தை நினைத்து பயந்து நடுங்குவோம்.

அதுவும் காதலில் விழுந்தது மகன் என்றால் கூட பரவாயில்லை பெற்றோர்கள் சகித்து கொள்கிறார்கள். அதுவே மகள் என்றால் நடப்பதே வேறு. அதையும் மீறி அவள் வேறு சாதியில் காதலித்தவனை கல்யாணம் செய்து கொண்டால் அவ்வளவு தான். புதுசா கல்யாணம் பண்ணியிருந்தாலும் சரி, வயிற்றில் நிறைமாத கருவுடன் இருந்தாலும் சரி ஓட, ஓட வெட்டிக்கொன்று ஆணவக்கொலையை அரங்கேற்றி விடுகிறோம். யாருன்னே தெரியாத சமூகத்திற்காக ஆசை, ஆசையாக வளர்ந்த மகளையும், மகனையும் ஆணவக்கொலை செய்யும் அளவிற்கு பெற்றோரை தூண்டுவது எது?. அப்படி சாதி பாசம் வர காரணம் என்ன? உங்களால் காதலர்களை மட்டும் தானே அழிக்க முடியும் காதலை அழிக்கவே முடியாதே.

ஏன் எனில் காதல் இயற்கையான ஓர் உணர்வு. இயற்கை உணர்வை யாராலும் அழிக்கமுடியாது. ஒரு பெண் மற்றும் ஆணுக்கு இடையே வரும் காதல் சாதி, மதம், ஏழை பணகாரன் பார்த்து வருவதில்லை. அவரவர் வைத்துள்ள மதிப்பீடுகள் அடிப்படையில் அல்லது அதையும் கடந்து வருகிறது. மேலும் இன்றைய சமூக சூழலானது இளம் வயது பெண்ணும்-ஆணும் சேர்ந்து பழகுவதற்கான வாய்ப்புகளை மிக அதிகளவில் உருவாக்கி தந்துள்ளது. இனி எந்த கொம்பனாலும் இளம் வயது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் ஏற்படும் காதலை அழிக்க முடியாது. காதல் உருவாகாமல் தடுக்கவும் முடியாது. இதுதான் நிதர்சனம்… உண்மை…

இளம் தலைமுறையின் காதல் வரவேற்போம். தைரியமாக காதல் செய்வோம் அதே வேளை விரும்பாத பெண்ணை நிர்பந்திப்பது… ஆசிட் வீசுவது போன்ற வெறிச்செயல்களை நிறுத்திக்கொண்டு அன்பு பாசம் நேசத்தின் அடிப்படையில் காதலை கட்டமைப்போம் காதல் வாழ்வை மணவாழ்வாக மாற்ற தடை ஏற்படும் அனைத்து இன்னல்களையும் எதிர்கொள்ள தயாராவோம்…!!


Share this:

Related posts

அழிவின் விளிம்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…!!

MANIMARAN M

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

POONKUZHALI

சிறுகதை : கண்காணிக்கப்படும் பட்டு – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

பாகம் 1: வேதங்கள் அறிவோம்… நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…!

NEWSKADAI

இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : நாசதீய சூக்தம்

NEWSKADAI

புயலைக் கிளப்பும் (CAG) தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நியமனம்.

MANIMARAN M