Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

Share this:

தமிழகத்தில் நடக்கும் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கண்ணோட்டத்துடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் அணுக ஆரம்பித்திருக்கின்றன. திமுக, அதிமுக, பாஜக, பாமக கட்சியினர் இந்த தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவில் இருந்து திமுகவிற்கும், திமுகவிலிருந்து பாஜகவிற்கும் பலரும் இடம் மாறிக் கொண்டிருப்பது தமிழகத்தின் ஹாட் அரசியல் டாப்பிக்காக உள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன பதில் இன்று அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற நிருபரின் கேள்விக்கு “அதிமுகவை இரு தலைவர்கள் வழி நடத்துகிறார்கள். தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்து எடுக்கிறார்களோ அவரே முதல்வர்” என்று பதில் கூறினார்.

இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் “எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்து விட்டு களத்தில் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே!” என பதிவிட்டு அதிமுக வட்டாரத்தில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்.


Share this:

Related posts

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

NEWSKADAI

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா ?அமைச்சர் பரபரப்பு தகவல்…

MANIMARAN M

4வது முறையாக முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்..!!! நாளை பதவியேற்பு விழா..!!!

MANIMARAN M

அடுத்த முதல்வர் யாரென்று?… நாங்கதான் முடிவு செய்வோம்…

MANIMARAN M