Newskadai.com
விளையாட்டு

சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர் இவர் தான்… அடுத்தடுத்து விழும் பலத்த அடி…!!

Share this:

வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL போட்டிகள் துவங்கவுள்ளன. இதனையொட்டி இப்போடிகளில் விளையாட கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் உள்ளிட்ட 51 பேர் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையில் துபாய் சென்றது. துபாய் சென்ற அனைவருக்கும் அமீரக விதிமுறைப்படி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துல் செய்யப்பட்டனர். பரிசோதனையில் ஒரு உதவி பந்து வீச்சாளர் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஏற்கனவே சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள 1,988 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.

 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் இந்திய ஏ அணியில் பங்கேற்றவர் என்றும், சிறப்பான பேட்ஸ் மேன் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அந்த வீரர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த வீரர் ருதுராஜ் ஜெய்க்வாட் ஆவார், 23 வயது இளம் பேட்ஸ்மேனான இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே இவரை ரூ.20 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே அணியில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தாச்சு… புகைப்படத்துடன் வெளியான அசத்தல் தகவல்…!!

AMARA

அதிரிபுதிரி IPL ஆரம்பம்… சென்னையுடன் மோதும் மும்பை…

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M

“தோனி வேற லெவல் பிளேயர்” தோணியை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்

MANIMARAN M

இந்திய அணிக்கு தங்கம்.. பஹ்ரைன் அணி தகுதி நீக்கம்…

NEWSKADAI

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 5 பேருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

MANIMARAN M