Newskadai.com
அரசியல்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?… முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை…!!

Share this:

இபிஎஸ் – ஓபிஎஸ் என இரண்டு தலைமை இருந்தாலும் அதிமுகவில் எவ்வித சலசலப்பும் இன்றி அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொளுத்திப் போட்ட முதல்வர் வேட்பாளர் பிரச்சனை கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. கடந்த 10ம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யார் முதல்வர் வேட்பாளார் என்று முடிவெடுப்பார்கள் என கூறியது புகைச்சலை ஏற்படுத்தியது.

 

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், எடப்பாடியார் என்றும் முதல்வர் எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே! என பதிவிட்டது அதிமுகவில் பதற்றத்தை உருவாக்கியது. இந்த கருத்தை அமோதிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடியாரே வைத்தே வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். செயற் குழு, பொதுக்குழு ஆகியோர் எல்லாம் கூடி உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வோம் என்றும் தெரிவித்தார். அப்போது யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை ஈடுபடுவீர்கள் என்ற கேள்வி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்வோம் என பதிலளித்தார்.

 

ஒற்றுமையாக இருந்த அதிமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஆரம்பித்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Share this:

Related posts

ஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…!!

AMARA

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

தமிழக பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் கமலாலயம்…!

AMARA

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA

“எங்கள் வீட்டில் பூஜை ரூமும், சாமி படங்களும் உண்டு”… பிள்ளையாரை வைத்து பிரச்சனை செய்ய நினைத்தவர்களை தெறிக்கவிட்ட உதயநிதி…!!

AMARA