Newskadai.com
அரசியல் இந்தியா

சிக்கலில் வாட்சப் – தகவல்கள் சேகரிக்கப்படுமா..? அச்சத்தில் பயனாளர்கள்..!

Share this:

மத்திய அரசின் சமூக வலைதளங்களின் புதிய விதிகளை எதிர்த்து வாட்சப் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் அதனை பயன்படுத்துவோர் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு மே மாதம் 25ம் தேதியுடன் முடிவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாத காலம் அவகாசம் கேட்டிருந்தன. எனினும், இதுவரை அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து எந்தவித அறிவுறுத்தல்களும் இந்தியாவில் உள்ள அதன் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற தகவல் தெரிய வந்தது. இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து  சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்து தங்களது சேவையை தொடர்ந்து வருகின்றன. ஆனால், வாட்ஸ்-அப் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சூழலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமர்சனத்தையும், கேள்வி கேட்கும் உரிமையையும் மத்திய அரசு வரவேற்பதாகவும், தனி உரிமையை முழுமையாக அங்கீகரிக்கிறது என்றும், ஆனால் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படும் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவே உதவுகிறது என்றார்.

மேலும்‘வாட்சப்’ பயன்படுத்துபவர்கள் பயப்பட தேவையில்லை என்ற அவர் சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு வழிவகுக்கும் செய்தியை முதலில் வெளியிட்டவர் யார் என்று கண்டுபிடிப்பதே புதிய விதிமுறைகளின் நோக்கம் என்றார்.


Share this:

Related posts

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்… மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

AMARA

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

MANIMARAN M

கொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா ? அலர்ட் ஆகும் அதிகாரிகள்

AFRIN

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

NEWSKADAI

தவறுதலாக வெடித்த துப்பாக்கி… மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்த டிஜிபி…!!

THAVAMANI NATARAJAN