Newskadai.com
சினிமா

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

Share this:

கடந்த சனிக்கிழமை மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் சஞ்சய் தத். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த சஞ்சய் தத் திங்களன்று வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென மேல்சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், “என்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக நான் எனது பணியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். நீங்கள் விபரீதமாக எதையும் கற்பனை செய்ய வேண்டாம். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களால் விரைவில் குணமடைந்து வருவேன்” என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய நோய் பற்றியோ, நுரையீரல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய செய்தி குறித்தோ சஞ்சய் தத் விளக்கம் எதுவும் கூறவில்லை.


Share this:

Related posts

நடிகையிடம் சில்மிஷம் – முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

AFRIN

தமன்னாவின் பெற்றோருக்கு உறுதியானது கொரோனா தொற்று… கலக்கத்துடன் வெளியிட்ட அறிக்கை…!

NEWSKADAI

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி… சதா நாடார் மீது வழக்குப்பதிவு…!!

AMARA

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

கொலையா? தற்கொலையா?… சிபிஐ கைக்கு போன சுஷாந்த் மரண வழக்கு…!!

MANIMARAN M

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA