Newskadai.com
தமிழ்நாடு

கேன்சரால் மனைவி மரணம்… துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கி கணவர் தற்கொலை…!

gudiyatham husband suicide
Share this:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் நெசவுத் தொழிலாளி சம்பத்(60) தனது மனைவி சுலோச்சனாவுடன்(57) வசித்து வந்துள்ளார். சலோச்சனா பக்கவாதம் மற்றும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் முதல் சம்பத்தை அக்கம்பக்கத்தினர் வெளியில் காணவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பத்தின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இரவு 10 மணியளவில் சம்பத்தின் வீட்டிற்கு சென்றுப் பார்த்துள்ளனர்.

gudiyatham husband suicide

அங்கு சென்ற அவர்களுக்கு சம்பத்தும் அவரது மனைவி சுலோச்சனாவும் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். கேன்சரால் பாதிக்கப்பட்ட சுலோச்சனாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும், மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த சம்பத் மனைவியின் உடல் அருகேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

ஆசை வைத்து மோசம் போன ‘காட்டு’ யானை… கோபத்தில் வேனை உருட்டித் தள்ளிய அட்டகாசம்…!

THAVAMANI NATARAJAN

சேலத்தில் கொரோனாவால் 2 மகன்கள் பலி… சோகத்தில் உயிரிழந்த தாய்… ஒரே வீட்டில் 3 மரணம்…!

THAVAMANI NATARAJAN

ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரித்த கடன் தொல்லை… செல்போன் கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை…!

THAVAMANI NATARAJAN

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M