Newskadai.com
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை..

weather forecast
Share this:

தமிழகத்தில் பொதுவாக குளிர்காலமான கார்த்திகையில் மழை பெய்ய வாய்ப்பு குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 23 ம் தேதி ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 24 ம் தேதி 8 மாவட்டங்களில் கனமானது முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

Rain

21 மற்றும் 22 ம் தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 23 ம் தேதி தஞ்சை, சிவகங்கை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 24 ம் தேதி கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்யக்கூடும் கன மழையால் பனியானது மிக குறைவாக பெய்யும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க http://அதிவேகமாக பைக்கில் வந்த 17 வயது சிறுவனால் தூக்கி வீசப்பட்ட சிறுமிகள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!


Share this:

Related posts

மருத்துவ காப்பீடு உட்பட 5 அதிரடி நடவடிக்கைகள் இன்று முதல் அமல்..!!

THAVAMANI NATARAJAN

பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம் ரத்து… பக்தர்களின்றி நடைபெற இருக்கும் திருவிழா…

MANIMARAN M

நாய்க்காக இளைஞரை கொலை செய்த முதியவர்.!!

THAVAMANI NATARAJAN

நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

மிரட்டும் ‘நிவர்’… நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!

THAVAMANI NATARAJAN

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

NEWSKADAI