Newskadai.com
அரசியல்

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

Share this:

திமுக வரலாற்றிலேயே முதன் முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தனி மனித இடைவெளியுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த 67 மாவட்ட நிர்வாகிகளும் அந்தந்த மாவட்டத்தில் காணொலி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை,

1. போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும்;

துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி-ஆ.இராசா ஆகியோருக்கும் வாழ்த்து.

2. கொரோனா பேரிடர் காலத்தில் சீரிய முறையில் உழைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள், தன்னார்வலர்கள், மனித நேய பண்பாளர்களுக்கு பாராட்டு

3.அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சமூகநீதியை காக்கும் படியான் அந்த தீர்ப்பிற்கு வரவேற்பு

4.மத்தியத் தொகுப்பிற்குத் தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” – “இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது என மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு வரவேற்பு

5. முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு

6. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக கண்டனம்

7. தேசிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம்; பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தல் மற்று இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு

8. புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020”-ஐ வெளியிட்டு. அதன்மீது ‘கருத்துக்கேட்பு’ என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்திய மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்

9. அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்

10. ஸ்டர்லைட் ஆலை’துப்பாக்கிச்சூட்டின் பலிகளுக்கு நீதி வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

11. கொரோனா பேரிடர் நிர்வாகத்தில் படுதோல்வியடைந்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்

12. அதிமுக ஆட்சியை வீழ்த்தி திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க சூளுரை

13. விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும்


Share this:

Related posts

“வீணாக வாக்கு வங்கியில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள்”… முதல்வரை மறைமுகமாக எச்சரித்த இல.கணேசன்…!!

NEWSKADAI

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

திருத்தணியில் போலீசார் குவிப்பு : தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை..!!!

MANIMARAN M

“மாணவ செல்வங்களே இதுபோல் செய்யாதீர்கள்”…. உருக்கமாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்…!!

NEWSKADAI

பயப்படாதீங்க மக்களே… எதையும் எதிர்கொள்ள தயார்… புயலை விட வேகமெடுக்கும் சுகாதாரத்துறை…!

AMARA

மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்… இரண்டே மணி நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்..!!!

THAVAMANI NATARAJAN