Newskadai.com
தமிழ்நாடு

ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…!!

Share this:

கொரோனா பெருந்தொற்றினால் பல மாதங்களாக பெரும்பாலனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பொது மக்கள் நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குள் உள்ளிட்ட சிலவற்றிற்கு தவிர மற்றவைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சையளிப்பதற்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டும், தனிமைப்படுத்துதலுக்கு தனி மையங்கள் ஏற்படுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மையங்கள் மற்றும் கொரோனா வார்டுகள் சிலவற்றில், குடிநீர் பிரச்சனை, உணவு வழங்கலில் பிரச்சனை, மருத்துவமனை வளாகம் தூய்மையின்றி இருப்பது போன்ற புகார்கள் அவ்வப்போது வந்தன. கடந்த வாரம் கொரோனாவிலிருந்து குணமடைந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று பாதி வழியில் இறக்கிவிட்ட புகார்களும் வந்தது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கபடவில்லை என புகார் எழுந்துள்ளது. சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் தங்களுக்கு முறையாக உணவு வழங்கபடுவது இல்லை என்பதால் தங்களை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தி நோயாளிகளை மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

MANIMARAN M