உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 43 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்திருந்தாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் இதன் பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். உலக அளவில் ஒப்பிடும் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு மடங்கு மக்கள் 10 நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றைப் பொறுத்தவரை அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முறையே முதலாவது, இரண்டாவது மற்றும் முன்றாவது இடத்தில் உள்ளன. அதுவும் அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு சுமா 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளது.