Newskadai.com
தமிழ்நாடு

செஞ்சூரி அடித்த மேட்டூர் அணை… சிறப்பு பூஜை நடத்திய அதிகாரிகள்..!!!

Share this:

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த வாரத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 21 ம் தேதி 89 அடியாக உயர்ந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.62 அடியாக மேலும் உயர்ந்து கொண்டிருந்தது.

Mettur Dam

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் 16 கண் மதகுகள் அருகே காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி.சந்திரசேகரன் மற்றும் மேட்டூர் அணையின் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டில் தற்போது தான் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையை கட்டி 87 ஆண்டுகள் ஆகிய நிலையில் இதுவரை 66 முறை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.


Share this:

Related posts

அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விஏஓ-க்கள்… நாளை அதிரடி போராட்டம்….!!

MANIMARAN M

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

சினிமா பாணியில் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் வெட்டிக் கொலை… சொத்துக்காக நடந்த பயங்கரம்..!!

THAVAMANI NATARAJAN

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN