Newskadai.com
தமிழ்நாடு

அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி..

Mettur Dam
Share this:

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8,830 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 10,045 கன அடியாக அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர்வரத்து உள்ளதால் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 6,700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 10 ஆயிரத்து 45 கன அடியில் இருந்து 10 ஆயிரத்து 68 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 91.89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 92.12 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பானது 55.10 டி.எம்.சி.யாக உள்ளது. இதனால் விவசாய பாசனத்திற்காக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Share this:

Related posts

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

THAVAMANI NATARAJAN

JEE தேர்வு எழுத முடியாமல் தலையில் அடித்துக்கொண்டு கதறும் மாணவர்கள்… மாவட்டம் டூ மாவட்டம் செல்ல பேருந்து இயக்கம் இல்லாததால் அவலம்…!

POONKUZHALI

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

THAVAMANI NATARAJAN

ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

POONKUZHALI