Newskadai.com
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா, முகவரி மாற்றணுமா?… எளிய வழிமுறை இதோ…!

voter id
Share this:

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நவம்பர் 16ம் தேதி தமிழக வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வரும் 2021 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக நிர்ணயத்து, அன்று 18 வயது நிறைவடைபவர்களையும் வாக்காளர் பட்டியிலில் சேர்க்கும் வகையில் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியிலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் மற்றும் இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயரை நீக்குதல் போன்றவைகளை செய்ய வாக்காளர்களின் வாக்குச்சாவடியில் முகாம் நடத்தப்படுகிறது, வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அதிகாரிக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

voters list

இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெரும் நாட்கள்

21.11.2020 முதல் 22.11.2020 வரை, 12.12.2020 முதல் 13.12.2020 வரை மற்றும் டிசம்பர் 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடமும் பதிவு அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட திருத்தங்கள் மற்றும் புதிய வாக்காளர் சேர்த்தல் போன்ற செயல்களை ஆன்லைனிலும் செய்துகொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முகவரிகள் https://www.elections.tn.gov.in/ மற்றும் https://www.nvsp.in/ உறிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம், இதன் இறுதி பட்டியல் 2021 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதையும் படிக்க http://இன்றும் நாளையும் மருத்துவ படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ..!!


Share this:

Related posts

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கான நீர் திறப்பு… மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்…!!

THAVAMANI NATARAJAN

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

தமிழக மக்களே தயார்: நாளை முதல் வீடு தேடி வருகிறது அரசின் அசத்தல் டோக்கன்…!

THAVAMANI NATARAJAN

துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் கூண்டு : தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை..!!!

MANIMARAN M

மாணவன் வாழ்க்கையில் விளையாடிய “பப்ஜி”… செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: இந்த 5 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகிறது கனமழை…!!

THAVAMANI NATARAJAN