Newskadai.com
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

Share this:

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பொது மக்கள் நலன் கருதி பொது வெளியில மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல தடைகளுடன் கூடிய பொது ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தடை விதித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த தடைக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தடையை மீறி தமிழகம் முழுவதும் 1,50,000 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளதாக, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்தார்.

இதற்கிடையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், “கொரோனா பாதிப்பு இல்லை என்றால் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப்போகிறது? தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. விநாயகர் ஊர்வலம் கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற விட்டால், மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

Madurai HC

இந்நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு அளித்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இளஞ்செழியன் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

உலக பிரசித்திப் பெற்ற கோயில் திருவிழா…பக்தர்கள் பங்கேற்க தடை..!! மாவட்ட எஸ்.பி.அறிவிப்பு…

MANIMARAN M

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

MANIMARAN M

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN