Newskadai.com
சினிமா

விஜய் சேதுபதிக்கு வந்த பார்ட் 2 காய்ச்சல்… தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

Share this:

நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாதுறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கர்கள் கூட்டத்தை கொண்டிருக்கிறார். இவர் பல குறும்படங்களில் பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் இணைந்து பணியாற்றினார். குரும்படத்திற்க்கான சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றுள்ளார், 2004 வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படித்திலிருந்து, புதுப்பேட்டை, லீ, நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு என சில படங்களில் சிறு தோற்றங்களும் நண்பன் தோற்றத்திலும் நடித்து வந்தார்.

Vijay Sethupathi

2010 ல் வெளியான “தென்மேற்கு  பருவக்காற்று” படத்தில் முதன் முறையாக  முறையாக ஹூரோவாக அறிமுகமாகி நடித்தார். இப்படம் சிறந்த படங்களுக்கான இந்திய தேசிய விருது, சிறந்த பாடலுக்கான விருது, மற்றும் இப்படத்தில் அம்மாவாக நடித்த சரண்யாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது என மூன்று விருதுகளை பெற்றது. அதன் பின் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதில் “தர்மதுரை” படமும் ஒன்று.

இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி இயக்கி விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து 2016ல் வெளியான படம் தர்மதுரை இப்படத்தில் யுவன்சங்கர்ராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது இதில் எந்தப் பக்கம் பார்க்கும் பொதும் பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் ரசிகர்களிடமும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படம் வெளியாகி நான்கு வருடம் ஆகிய நிலையில் #4YearsofDharmadurai என்ற டேகை பயன்படுத்தி இப்படத்தின் குழுவினர்கள் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தாயரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இப்படம் ஆகஸ்ட் 19 ல் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் சீனுராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்க்கான பணிகள் நடந்து  வருவதாக தெரிவித்துள்ளார்


Share this:

Related posts

மறைந்த நடிகர் சுஷாந்திற்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரகுமான்…!!

NEWSKADAI

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

அஜித்துக்கு மட்டும் ஓல்டு கெட்டப்பா?… “வக்கீல் சாப்” மோஷன் போஸ்டரை பார்த்து கொந்தளிக்கும் தல ஃபேன்ஸ்…!

AMARA

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சக நடிகையால் கதறி அழுத முல்லை… வைரலாகும் வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டிய டிக்-டாக் காதலன்… தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை…!!

THAVAMANI NATARAJAN

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”… ரஜினி வெளியிட்ட உருக்கமான வீடியோ…!

NEWSKADAI