Newskadai.com
அரசியல்

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

Share this:

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இருபெரும் கட்சியினுடைய தலைவர்கள் மறைவிற்குப் பின் தமிழகம் சந்திக்கவிருக்கும் மிக முக்கிய தேர்தல் களம். வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டன.

ADMK

கடந்த சில வாரங்களாக தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல முக்கிய பிரபலங்கள் கட்சி மாறி பரபரப்பை ஏற்படுத்தினர். சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குவதற்கு முன்பே யார் முதல்வர் வேட்பாளர் என்று அதிமுகவில் உட்கட்சி பூசல் ஆரம்பித்துவிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் திமுகவின் பொதுக் குழு கூட இருக்கிறது. அதிமுக பாஜக வின் கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது, இருப்பினும் இருகட்சித் தலைவர்களும் கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பேட்டியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் தனது குடும்பத்துடன் நேற்று ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இருந்தபோதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். அந்த தலைவர்கள் மறைவிற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை விஜயகாந்தால் மட்டும்தான் நிரப்ப முடியும்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நிறைகளும் குறைகளும் இருக்கின்றன. அதிமுக பாஜக கூட்டணி மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சித் தொண்டர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதையே விரும்புகின்றனர், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Share this:

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மது வழங்கப்படும் – அரசின் அதிரடி அறிவிப்பு

AFRIN

எம்.பி. வசந்தகுமார் உடல் சந்தனபேழையில் நல்லடக்கம்… தாய், தந்தை நினைவிடம் அருகே புதைப்பு…!

AMARA

அதிமுகவில் அடுத்து சிக்கப் போகும் முக்கிய பிரமுகர்… பாலியல் புகார் உடன் பாதிக்கப்பட்ட பெண் வெயிட்டிங்…!

NEWSKADAI

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA

இந்தி தெரியாத மாநிலங்கள் நாட்டை விட்டு வெளிய போங்கன்னு சொல்லிடுவீங்களா?… பொங்கியெழுந்த சீமான்…!!

MANIMARAN M

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA