Newskadai.com
அரசியல்

தமிழக அரசே! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி..

Share this:

தமிழக அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பு ஊதியமாக வழங்கப்பட்டது. ஊதியம் குறைவாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இந்த 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகள் கடந்த பின்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்ய வேண்டி பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் கோரிக்கை நியாயமானது என்பதால் தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M

குமரியை கைப்பற்ற துடிக்கும் பொன்னார்… “டார்கெட் கன்னியாகுமரி” வியூகம் வகுக்கும் பாஜக…

MANIMARAN M

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

திமுக முன்னாள் அமைச்சர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்டவரை கொண்டு சென்ற எமன்…!!

AMARA

நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு… யாரு கண்ணு பட்டுச்சோ..! முட்டிக் கொள்ளும் அதிமுக அமைச்சர்கள்

MANIMARAN M