பிரபல தொழிலதிபரும் கன்னியகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் வலம் வந்த வசந்தகுமார் கொரோனா தொற்று பரவல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். வசந்தகுமாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் வசந்தகுமரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்து. இதை தொடர்ந்து வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் தமிழ் சினிமாவில் நண்பன், வேலைக்காரன், நாடோடிகள் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், அச்சமின்றி படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்ததே.
1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி. #missyoudad#vasanthakumar pic.twitter.com/rfxDZ11YLG
— VijayVasanth (@iamvijayvasanth) August 30, 2020
இந்நிலையில் நடிகர் விஜய் வசந்த் தனது தந்தையின் மறைவை பற்றி ட்விட்டரில் உருக்கமாக உறையாற்றியுள்ளார். வெறும் கனவுகளுடன் சென்னைக்கு சுமார் 1970களில் வந்த எனது தந்தை 50 ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஜமாக்கிய ஒரு உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி. மிஸ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.