Newskadai.com
சினிமா

ரசிகர் மன்ற பிரச்சனை: விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை…

Vijay Sethupathi
Share this:

புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொலை சம்பவங்கள் என்றாலே சர்வசதாரணமாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவருக்கு இரு குழந்தைகள் உள்ளது. இவர் புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மர்ம நபர்கள் தாறுமாறாக வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Vijay Sethupathi

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனுக்கு போட்டியாக, உறவினரான ராஜசேகர் என்பவர் ஆட்டுப்பட்டி பகுதியில் ஒரு ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் எற்பட்டு வந்துள்ளது.

இப்பிரச்சனைக்கு ஒரு எண்ட் கார்டு போட நினைத்த மணிகண்டன் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பது குறித்தும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவும் முன்றுள்ளார். ஆனால் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு  புறப்புட்டுச் சென்றுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மணிகண்டனை மூன்று பேர் பின் தொடர்ந்து நெல்லித்தோப்பு மார்கெட் எதிரே சரமாறியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பித்துள்ளார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதனால் ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து உருளையன் பேட்டை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது… பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!!!

MANIMARAN M

“உன்னத மனிதர் உறங்குகிறார்”.. தந்தையின் மறைவு குறித்து பிரபல நடிகரின் கண்ணீர் பதிவு…!!

THAVAMANI NATARAJAN

நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

AMARA

பிக்பாஸ் வீட்டிற்குள் கதறி அழுத அனிதா சம்பத்… வைரல் வீடியோ…!

NEWSKADAI

காதல் டூ கண்மணி…. சின்னத்திரை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க போகும் பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN

விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு திடீர் திருமணம்… 15 பேர் மட்டுமே பங்கேற்ற ரகசிய கல்யாணம்..!!

NEWSKADAI