பாம்பென்றால் படையே நடுக்கும் என்பது பழமொழி. ஆனால் வியட்நாமில் பெண் ஒருவர் அவர் உயரம் உள்ள விஷமுள்ள பாம்பை தைரியமாக பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேலி ஓரத்தில் ஊர்த்து சென்ற மிகப்பெரிய பாம்பு ஒன்றை சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் தைரியமாக கையில் பிடிக்கிறார்.
ஆனால் அந்த பாம்போ தன்னை விட உயரம் குறைவான அந்த பெண் பிடிக்குள் அடங்காமல் தப்பிக்க முயற்சிக்கிறது. அவரை தன்னுடைய வாலால் தாக்கியும், கையை இறுக்கி பிடித்தும், வேகமாக தப்பியோட முயற்சிக்கிறது. கடுமையாக பாம்பு போராடினாலும் அந்த பெண் அதனை விடவே இல்லை, அசால்ட்டாக கையில் பிடித்து சாதாரணமாக சாலையில் நடந்து செல்கிறார்.
இதனை காருக்குள் இருந்த படி வீடியோ எடுத்தவர்கள் இந்த பகீர் காட்சிகளை யூ-டியூப்பில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
http://என்னப்ப நடக்குது இங்க… இவ்வளவு விலையா? தங்கம்…