Newskadai.com
அரசியல் உலகம்

அதிர்ச்சி…! காற்றில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

Share this:

வியட்நாம் நாட்டில் அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸின் 2வது அலையால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதால் உயிர் பலியும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸுக்கு எதிராக போராடி வரும் சூழலில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி புதிய உருமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்திருந்தாலும் 4 வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக உள்ளன. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், இங்கிலாந்து வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் என நான்காக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் பரவக்கூடியதாகவும் உள்ளது என்றும் வியட்நாம் அமைச்சர் நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ், இங்கிலாந்து வைரஸ் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 


Share this:

Related posts

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

“தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்”… அதிமுகவில் வெடித்தது உச்சகட்ட மோதல்…!!

AMARA

காங்கிரஸ்க்கு அடிமேல் அடிகொடுக்கும் பஞ்சாப்.. ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து :

NEWSKADAI

விரைவில் விடுதலையாகிறார்களா 7 தமிழகர்கள்? … முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தால் பரபரப்பு…!

NEWSKADAI

“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…!!

NEWSKADAI