Newskadai.com
தமிழ்நாடு

உலக பிரசித்திப் பெற்ற கோயில் திருவிழா…பக்தர்கள் பங்கேற்க தடை..!! மாவட்ட எஸ்.பி.அறிவிப்பு…

Share this:

உலக அளவில் பிரசித்திப் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் மக்கள் கூடும் திருவிழா இது. குறிப்பாக, மஹாராஷ்ட்ரா, கோவா, டில்லி, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து பெருவாரியான மக்கள் இத்திருவிழாவில் கலந்துக் கொள்வார்கள். மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற நாகை மாவட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவில் பல்வேறு மதத்தவர்களும் கலந்துக் கொள்ளும் சிறபம்சம் கொண்டது. இப்பேராலய ஆண்டுப் பெருவிழா வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவடைகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம், இந்த ஆண்டு பேராலய பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்குத் தந்தையா்கள், உதவிப் பங்குத் தந்தையா்கள் உள்பட 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாடுகளில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொடி ஊா்வலம் பேராலய வளாகத்திலேயே நடைபெறும். வெளியூா்களிலிருந்து வரும் நபா்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என விடுதி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

 


Share this:

Related posts

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

MANIMARAN M

திருமணமாகி 28 நாட்களே ஆன புதுபெண் தூக்கிட்டு தற்கொலை :

NEWSKADAI

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

கோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் ஆகாமல் தணியாது வேகம்…!!

THAVAMANI NATARAJAN