Newskadai.com
லைஃப் ஸ்டைல்

பக்தர்களின்றி இன்று துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா..

Share this:

உலக அளவில் பிரசித்திப் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இப்பெருவிழாவில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக, மஹாராஷ்ட்ரா, கோவா, டில்லி, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து பெருவாரியான மக்கள் கலந்துக் கொள்வார்கள். மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற நாகை மாவட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவில் பல்வேறு மதத்தவர்களும் கலந்துக் கொள்ளும் சிறபம்சம் கொண்டது.

இப்பேராலயத்தின் இந்த ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவடைகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இந்த ஆண்டு பேராலய பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்குத் தந்தையா்கள், உதவிப் பங்குத் தந்தையா்கள் உள்பட 30 பேருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வழிபாடுகளில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொடி ஊா்வலம் பேராலய வளாகத்திலேயே நடைபெறும் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாதா பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில் நாகை மாவட்ட எல்லைகளில் 21 சோதனை சாவடிகள் அமைத்து 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கும் வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா நிகழ்வு, செப்டம்பர் 7 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனியும், செப்டம்பர் 8 ஆம் தேதி கொடி இறக்குதல் நிகழ்வுடன் நிறைவடையும் என்றும் இந்நிகழ்வுகளை கீழ்காணும் இணையவழியில் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பேராலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

கொரோனாவை தடுக்க இந்த 6 பொருட்கள் போதும்… சூப்பரான நோய் எதிர்ப்பு சக்தி பானம் இதோ…!!

THAVAMANI NATARAJAN

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI

இந்த ராசிகாரர்களே… கோபத்தை குறைத்தால் லாபம் பெருகும்… வெற்றி நிச்சயம்..!!

THAVAMANI NATARAJAN

தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் இந்த வேலை…!! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

அற்புதமான நாள்… எதிர்ப்பார்த்த காரியம் கைகூடும்… ராசியான எண், வண்ணம் இதுதான்…!!

THAVAMANI NATARAJAN

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M