Newskadai.com
தமிழ்நாடு

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

Share this:

உலக அளவில் பிரசித்திப் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் மக்கள் கூடும் திருவிழா இது. குறிப்பாக, மஹாராஷ்ட்ரா, கோவா, டில்லி, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து பெருவாரியான மக்கள் இத்திருவிழாவில் கலந்துக் கொள்வார்கள். மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற நாகை மாவட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவில் பல்வேறு மதத்தவர்களும் கலந்துக் கொள்ளும் சிறபம்சம் கொண்டது.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பாத யாத்திரையாக பலரும் மாதா கோயில் திருவிழாவிற்கு வந்தடைவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறக்கூடியது. பத்தாம் நாள் அன்னை வேளாங்கண்ணியின் சப்பரம் ஊர்வலத்துடன் நிறைவு பெறும். இத்திருவிழா பல நூறு வருடங்களாக நடைபெற்று வருகிறது.

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா பெருந்தொற்றினால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக அரசு பல்வேறு கட்டுபாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் விதமாக இவ்வருடம் பக்தர்களும், யாத்ரீகர்களும் வேளாங்கண்ணிப் பேராலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, “கொரோனா நோய்த் தொற்றால் கூட்டம் கூட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமை, மேலும் மக்களின் பாதுகாப்புக் கருதி 2020 ஆண்டு பெருவிழா வழக்கம்போல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் வலைதளம் வழியாக ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே அதில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்”, என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.


Share this:

Related posts

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

AMARA

கோவை, நீலகிரி மக்களே உஷார்… மீனவர்களே நீங்களும் ஜாக்கிரதையா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

AMARA

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

+1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்…

MANIMARAN M

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M