Newskadai.com
அரசியல்

“சாதி அரசியல் செய்பவரோடு கூட்டணி இல்லை”… இறங்கி வந்த ராமதாஸ்… எகிறி அடிக்கும் திருமா…!!

Share this:

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற திமுவும், ஆட்சியைத் தக்க வைக்க அதிமுகவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக பாஜக இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்று பாஜக தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ராமதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் விசிகவின் செயல்பாடுகள் மீது தான் எங்களுக்கு அதிருப்தி என்றும், அக்கட்சியுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் பாமகவிற்கும் – விசிகவிற்கும் எவ்வித பகையும் இல்லை என்றும் கூறினார். இதன் மூலம் விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் பாமக இணைய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது. பாமகவுடன் கூட்டணி வைப்பது சந்தர்பவாதம் மற்றும் முட்டாள்தனத்துக்கு நிகரானது, ராமாதாசுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை கிடையாது, அரசியலில் தோல்வியைத் தழுவும் போதெல்லாம் சாதியை கையில் எடுப்பவர் அவர், என கூறி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Share this:

Related posts

“தமிழகம் முழுவதும் 500 துணை மின் நிலையங்கள்”… பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…!!

MANIMARAN M

“மாணவ செல்வங்களே இதுபோல் செய்யாதீர்கள்”…. உருக்கமாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்…!!

NEWSKADAI

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI

புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத ஒன்று – நாராயணசாமி அதிரடி கருத்து…!!

POONKUZHALI