Newskadai.com
லைஃப் ஸ்டைல்

சகல செல்வங்களையும் கொடுக்கும் வரலட்சுமி விரதம்….!!

Share this:

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டுவோர் வரலட்சுமி விரதமிருப்பது சிறப்பு, வரலட்சுமி விரதமானது ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையை வரலட்சுமி விரதமாக கொண்டாடப்படுகிறது. இந்தவருடம் ஜூலை 31, ஆடி மாதம் 16ம் தேதி. இவ்விரதமானது வீட்டிலேயே பெண்களால் கடைபிடிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதத்தின் சிறப்புகள்

  • தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்
  • 16 வகையான செல்வங்களையும் பெறமுடியும்
  • திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் அமையும்
  • மாமியார் மருமகள் உறவு மேம்படும்
  • கேட்ட வரமெல்லாம் கிடைக்கும்

கடைபிடிக்கும் முறை

லட்சுமி விரத்திற்க்கு முந்தைய நாள் வீடு மற்றும் பூஜை அறையையை சுத்தம் செய்து, வாழை இலையில் ஒருபடி அரிசி கொட்டி பூஜையறையில் வைக்க வேண்டும். ஒரு வெள்ளி அல்லது பித்தளை சொம்பில் தண்ணிர் நிரப்பி அதில் மஞ்சள் மற்றும் ஒரு எழுமிச்சை பழம் போட்டு வைக்கவும். பிறகு வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சை அரிசி மாவில் கோலமிட்டு, மா இலைகளில் தோரணம் கட்டி, லட்சுமியை நினைத்து ஒரு தேங்காயில் மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து வாசலில் வைக்க வேண்டும்.

அடுத்த நாளான வரலட்சுமி விரதத்தன்று அதிகாலை எழுந்து தலைகுளித்து மகாலட்சுமிக்கு மலர்தூவி நெய் விழக்கேற்றவேண்டும், மஞ்சள், குங்குமம் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து லட்சுமியை நினைத்து, வேண்டும் வரத்தினை கேட்க வேண்டும், பூஜையை முடித்த பிறகு குங்குமம் மற்றும் தாழம்பூவை பூஜைக்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கும் பொழுது கொடுப்பவர்களுக்கும் அதை பெறுபவர்களுக்கும் செல்வம் சேரும் என்பது ஐதீகம்.

இவ்விரதத்தினை அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காலையோ முடித்துக் கொள்ளலாம். அனைவரும் லட்சுமியின் அருளை பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம். வீட்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை இருக்குமானால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது நன்று. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.


Share this:

Related posts

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

இன்றைய ராசிபலன்: செய்யும் காரியங்கள் சிறப்பாக அமையும்…

THAVAMANI NATARAJAN

வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

NEWSKADAI

இதுதான் பாஸ் இந்தியா… இந்து கோவில் கட்ட இடம் கொடுத்த முஸ்லிம் குடும்பம்… நெகிழ்ச்சியான சம்பவம்…!!

NEWSKADAI

உடல் பருமனை குறைக்க இத செஞ்சு பாருங்க…

NEWSKADAI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M