Newskadai.com
தமிழ்நாடு

அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விஏஓ-க்கள்… நாளை அதிரடி போராட்டம்….!!

Share this:

வீடு என்பது நடுத்தர மக்களின் பெரும் கனவாகவே உள்ளது. பெரும்பாலும் சொந்த வீடுகளை வாங்குவதை சாதனையாக எண்ணுகின்றனர். வீடு வாங்கும் பொழுது பத்திரப்பதிவு செய்தப் பிறகு அதற்காக பட்டா மாறுதல் சம்பந்தமாக யாரும் பெருமுயற்சி செய்வதில்லை. சொத்துகளை விற்கும் சமயத்தில், வாங்குபவர் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கும் போது தான் பட்டா பெற முயற்சிகள் செய்கிறார்கள். அம்முயற்சியும் பல மாதங்களுக்கு நீடிக்க கூடிய ஒன்றாகவும் சிரமங்கள் நிறைந்ததாகவும் இது நாள் வரை இருந்துவருகிறது.

 

இந்த தாமத்தையும் சிரமங்களையும் போக்கும் வகையில் தமிழக அரசு பதிவுத்துறையில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாற்றும் முறையை செயல்படுத்த அரசாணை ஒன்றை சென்ற சில நாட்களுக்கு முன் பிறப்பித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இந்த ஆணை விஏஓ-க்களின் அதிகாரத்தையும், பொறுப்பையும் பறிக்கக் கூடியது என்றும், இத்திட்டத்தைக் கண்டித்து ஆக.3-ல் மௌனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கா.செல்வன் அறிவித்துள்ளார்.

VAO
 

மேலும் இது குறித்து கூறுகையில், “பதிவுத்துறையில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாற்றும் முறையை அரசு செயல்படுத்தியுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இச்செயல் திட்டத்தினால் பல்வேறு நடைமுறை சிக்கல் உண்டாகும் என்பதை அறிந்தும், அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாணை விஏஓ-களில் அதிகாரத்தையும், பொறுப்பையும் பறித்து வேறு துறைக்கு கொடுக்கும் விதமாக உள்ளது. இதுகுறித்து அரசிடம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி முதற்கட்டமாக நாளை திங்கள்கிழமை ஆக.3-ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விஏஓ-க்கள் மௌனப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.


Share this:

Related posts

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

MANIMARAN M

டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் 3,007 போலீசார்… உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்…!

NEWSKADAI

கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபடும் கோவை மக்கள்..!

MANIMARAN M

நாகை எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி… அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!

POONKUZHALI

மேட்டூரில் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி… திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல்…!!

AMARA