Newskadai.com
சினிமா

வனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…!

vanitha
Share this:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற வனிதா, கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். 40 வயதில் முதலில் வனிதா திருமண விவகாரத்தை ஆதரித்த போது பலரும் ஆதரிக்கவே செய்தனர். ஆனால் பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல், பிள்ளைகளை தவிக்கவிட்டு, வனிதாவை கரம் பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதையடுத்து வனிதா – பீட்டர் பால் திருமண விவகாரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனிடையே சூர்யா தேவி என்பவர் வனிதாவை மிகவும் கொச்சையாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து தனது யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வந்தார். பொறுத்து, பொறுத்து பார்த்து பொங்கியெழுந்த வனிதா, தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக சூர்யாதேவி மீது போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து கடந்த 22ம் தேதி நள்ளிரவில் சூர்யா தேவியை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அன்றைய தினமே நடிகை கஸ்தூரியின் வழக்கறிஞர் மூலம் ஜாமீன் பெற்ற சூர்யா தேவி விடுதலையானார். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் கைது செய்யப்படும் நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் சூர்யா தேவி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றைய தினமே பெண் காவல் ஆய்வாளர் ஜோதியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சூர்யா தேவி தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சூர்யா தேவி கைது செய்யப்பட்ட போது உடன் இருந்த வனிதா மற்றும் பிற காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

அடுத்த ரவுண்டுக்கு அசத்தலாக தயாரான சிம்பு… அடுத்து யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

காதல் டூ கண்மணி…. சின்னத்திரை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிக்க போகும் பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

அடுத்த அதிர்ச்சி… கொரோனாவால் பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகம்…!!

AMARA

#Doctor நெட்டிசன்களிடம் சிக்கிய அனிருத்… செல்லம்மா பாடல் இந்த பாடலின் காப்பியா? #SK| #newskadai

NEWSKADAI

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA