Newskadai.com
சினிமா

ஐசியூ- வில் வனிதாவின் 3வது கணவர்; வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஹரி…!!

Share this:

  • நயன் – விக்கி காதல் விவகாரம் என்று தான் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துகிடக்கிறார்கள். 5 வருஷமா காதலிச்சிட்டே இருக்கீங்களே கல்யாணம் எப்ப பாஸ்… என்று கேட்டு நச்சரித்தவர்களுக்கு விக்னேஷ் சிவன் சூப்பராக பதில் கொடுத்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், எப்போ லவ் போர் அடிக்குதோ? அப்போ கல்யாணம் பண்ணிக்குவோம்ன்னு கூலாக பதில் கொடுத்துள்ளார். இதை கேட்கவா இத்தனை நாள் கஷ்டப்பட்டோம் என நயன் ரசிகர்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

  • இரண்டு முறை விவாகரத்து பெற்ற பிறகும் நான் நிச்சயம் வாழ்த்து காட்டுவேன் என 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். நல்ல படியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீசியது போல், நேற்றிரவு பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (வாழ்க்கை ரொம்ப கஷ்டமானதுன்னு இதுக்கு தான் ட்வீட் போட்டியா வனிதா அக்கா)

  • சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் அக்.30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கு ஏற்கனவே பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அவர்களை சூர்யாவின் ரசிகர்கள் சுளுக்கெடுத்து வருகிறார்கள். போதாக்குறைக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால் தான் நாம் உயரத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம் என இயக்குநர் ஹரி அறிக்கை விட்டார். சும்மாவே சூடான சூர்யா ரசிகர்கள் விடுவார்களா? பாவம் சோசியல் மீடியாவில் வச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். (ஏன் தலைவா? தேடி போய் வாங்கிக் கட்டிக்கிறீங்க)

  • எப்படியாவது விட்ட இடத்தை பிடித்தே தீருவேன் என அயராது பாடு படும் அருண் விஜய், தற்போது அசத்தலான போட்டோ ஒன்றை வெளியிட்டு ஹாலிவுட் நடிகர்களுக்கே டப் கொடுத்துள்ளார். எக்ஸ்மேன் படத்தின் வால்வரின் கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து பலரும் கண் வைக்க ஆரம்பித்துவிட்டனர். (போற போக்கைப் பார்த்தல் விஜய், அஜித்துக்கே டப் கொடுப்பார் போலயே).

  • “பேட்ட” படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுத்த சிம்ரன். மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆகா… ஓஹோ… என இருக்கும் என எதிர்பார்த்தார். அதற்காக கஷ்டப்பட்டு மீண்டும் இடுப்பை எல்லாம் ஆட்டி டிக்-டாக்கில் ஆட்டம் போட்டார். ஆனால் ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல. இதனால் பிரபல இயக்குநரின் மகன் தெலுங்கில் அறிமுக ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் மாமியாராக நடிக்க சம்மதித்துள்ளார். (எட்டாத கனிக்கு கொட்டாவி விட்டு என்ன செய்ய சிம்ரன்…!)

Share this:

Related posts

“இத்தோட நிறுத்திக்கிட்ட நல்லது”… விஜய், சூர்யா குடும்பம் மீது வரம்பு மீறும் விமர்சனம்… மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பாரதிராஜா…!!

THAVAMANI NATARAJAN

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

எப்படியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்?… சற்று முன்பு வெளியான பரபரப்பு அறிக்கை…!!

NEWSKADAI

“அதுக்கு மட்டும் நோ”… கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட சாய் பல்லவி…!!

NEWSKADAI

திரையரங்குகள் திறக்கபடுமா..? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்…

MANIMARAN M

கொரோனாவிலிருந்து மீண்டாரா எஸ்.பி.பாலசுப்ரமணியம்??… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

AMARA