Newskadai.com
சினிமா

“மீண்டு வா… இசை உலகை ஆள வா”…. எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி வைரமுத்து உருக்கம்…!

vairamuthu
Share this:

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

SPB

 

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோவில், அப்பா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மயக்கத்தில் இருந்து மீண்டுவிட்டார். தனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மருத்துவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். நன்றாக சுவாசிக்கிறார். இருப்பினும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உங்களுடைய பிரார்த்தனை தொடருங்கள். அப்பா விரைவில் பூரண குணமடைவார் என நல்ல செய்தி சொல்லியிருந்தார்.

 

 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற வேண்டுமென வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடி கோடி, கோடி மக்களை மகிழ்வித்தார் மதிப்பிற்குரிய எஸ்.பி.பி. அவர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டியுள்ளார் என கேள்விப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

 

Vairamuthu

 

தற்போது கவிப்பேரரசு வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.பி.பி. அவர்களே… எங்கள் வாழ்வின் அன்றாடமே… எங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடு கட்டி பாடும் குயிலே… மீண்டு வர வேண்டும். இசை உலகை நீங்கள் ஆண்டு வர வேண்டும். என் முதல் பாடல் பாடியவன் நீ. என் கடைசி பாடலையும் நீ தான் பாட வேண்டும். மேகங்கள் வந்து வந்து போகும், வானம் நிரந்தரம். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று மாறி மாறி நிகழ்ந்த என் கலை வாழ்வில் மாற கலைஞன் நீ. மீண்டு வருவாய். இசை உலகை ஆண்டு வருவாய். என இந்த உலகமே காத்திருக்கிறது.

இந்த உலகத்துக்கு இன்பம் மட்டும் கொடுத்து பழகியவன் நீ , துன்பம் கொடுக்க மாட்டாய் என எனக்கு தெரியும். பாட்டுக் குயிலே கூண்டை உடை, சிறகை விரி… மீண்டு வா இசை உலகை ஆண்டு வா… பாடவா என பேசியுள்ளார். மேலும் “காதல் ரோஜா” என்ற பாடலை மாற்ற “பாடல் ராஜாவே எங்கே நீ எங்கே. கண்ணீர் வழியுது அய்யா இங்கே” என உருக்கமாக பாடியுள்ளார். வீடியோவில் கடைசியாக பாலு உங்களுக்காக இசை உலகம் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…


Share this:

Related posts

“பாகுபலி” இயக்குநர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று உறுதி… குடும்பத்தினரையும் விட்டு வைக்காத கொடுமை…!

AMARA

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகருக்கு அடித்தது ஜாக்பாட்… விஜய் வீட்டிலிருந்து வந்த சர்ப்ரைஸ் போன்கால்…!!

THAVAMANI NATARAJAN

“I am a Tamil பேசும் இந்தியன்”… மகனுடன் சேர்ந்து கெத்தாக போஸ் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன்…!!

NEWSKADAI

‘சீறு’ பட பாடகர் திருமூர்த்தி உட்பட 12 பேருக்கு தொற்று… ஊத்தங்கரையை உலுக்கி எடுக்கும் ‘கொரோனா’…!

AMARA

“சீக்கிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

AMARA

இந்தி தெரியாதா?… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…!!

MANIMARAN M