Newskadai.com
தமிழ்நாடு

வைகை எக்ஸ்பிரஸில் தீ விபத்து : திருச்சியில் பயணிகள் அவதி…!!!

Share this:

கொரொனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று சென்னையிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சி வந்த போது தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதட்டமடைந்தனர். நேற்று சென்னை எழும்பூரிலிருந்து அரியலூர், திருச்சி வழியாக வைகை எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட ரயில் மாலை 6.45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வந்தடைந்தது.

சிறிது நேரத்திற்கு பின்னர் மதுரைக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை கடந்த போது இன்ஜினுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் இணைப்பு பாதையின் இடைப்பட்ட கம்பியில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் இன்ஜினுக்கு செல்லும் மின்சாரம் தடைப்பட்டு அதே இடத்திலயே ரயில் நின்றுவிட்டது. மின்சாரம் துண்டிப்படைந்ததால் அனைத்து ரயில் பெட்டிகளிலும் உள்ள பயணிகளிடம் பதட்டம் தொற்றிக் கொண்டு கூச்சலிட்டுக் கொண்டே கீழே ஓடியுள்ளனர். ரயில் இன்ஜின் டிரைவர்கள் ஜங்ஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே இன்ஜினீயர்கள், எலக்ட்ரீஷியங்கள், ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது ரயிலுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பியில் கருகிய பூமாலை ஒன்று தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மின் தடையால் ஒரு மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்டு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். பின்னர் அது அகற்றப்பட்டு மின் இணைப்பு சரிசெய்யப்பட்டது. பின்னர் இரவு 7.40 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.


Share this:

Related posts

“குடும்பத்தை விட கடமையே முக்கியம்”… கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு ஜலகையில் வீரவணக்கம்…!

THAVAMANI NATARAJAN

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

#CORONAVIRUS : ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் பாதிப்பு, பலி எண்ணிக்கை நிலை..!!

NEWSKADAI

பற்றி எரியும் மீனவ கிராமம்… கடலூரில் இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI

கிரெடிட் கார்டு மூலம் ரூ.10 லட்சத்தை ஆட்டைய போட்ட இன்ஜினியர்… கைது செய்ய உதவிய ஹெல்மெட்..!!!

THAVAMANI NATARAJAN