Newskadai.com
கேலரி

அப்பா கண்ண திறங்க… கதறி அழுத ‘வடிவேல்’ பாலாஜி மகள்… கண்களை கலங்க வைக்கும் இறுதிக்காட்சிகள்…!

vadivel balaji
Share this:

vadivel balaji
விஜய் டி.வி.யின் பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு” சீசன் 4 மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார் வடிவேல் பாலாஜி.

 

vadivel balaji
ஆரம்பத்தில் பிணவறையில் போஸ்ட் மார்ட்டம் செய்யும் வேலை பார்த்து வந்த பாலாஜி, ’கலக்கப்போவது யாரு’ சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரம் காமெடி ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.

 

vadivel balaji
வேலையை விட முடியாத அளவிற்கு குடும்பத்தின் பொருளாதார சூழல் இருந்த காலத்தில் கூட, அதனை முடித்துவிட்டு அவசர அவசரமாக சென்று கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 

vadivel balaji
45 வயதே ஆன வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் கை, கால்கள் பக்க விளைவால் செயலிழந்தது.

 

 

Vadivel balaji
இதையடுத்து 4 தனியார் மருத்துவமனைகளில் மாறி, மாறி சிகிச்சை பெற்று வந்த வடிவேல் பாலாஜி இறுதியில் பணம் இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜியின் உயிர் பிரிந்தது.

 

இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

vadivel balaji
ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவின் உடலை பார்த்து, அப்பா எழுந்திருங்க… கண்ண திறங்க என அவருடைய மகள் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் காண்போரின் இதயத்தை சுக்கு நூறாக வெடிக்க வைக்கிறது.
vadivel balaji
பள்ளி செல்லும் சிறுமியான பாலாஜியின் மகள், அப்பாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பெட்டியைத் தட்டி தட்டி கதறி அழுவதை பார்க்கும் போது நம்மை அறியாமல் சோகம் சூழ்கிறது.

 

அறியாத வயதில் அப்பாவை இழந்துவிட்ட சிறுமி அதனை தாங்க முடியாமல் கதறுவதும், காசு இல்லாததால் கணவனை பறிகொடுத்த அபலை பெண்ணின் கண்ணீரும் எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் ஆற்ற முடியாதது.

 

 


Share this:

Related posts

புடவையில் செம்ம கெத்தாக சுற்றும் நயன்தாரா… அழகை வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகர்கள்…!!

POONKUZHALI

தமிழ்நாட்டில் ஆட்டம் காட்டும் கொரோனா இன்றைய நிலை..? (31-08-2020)… கோவை, நாகை, மதுரை, சேலம்..!?

NEWSKADAI

3ஆம் இடம் தமிழகம்… 2ஆம் இடத்தில் இந்தியா… என உச்சத்தை தொட்ட கொரோனா…

NEWSKADAI

இஷ்டத்துக்கு இம்சைக்கும் கொரோனா… கோவை, நாகை, சேலம், மதுரையில்… இன்றைய நிலை..!?

NEWSKADAI

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

“கே.ஜி.எஃப்” படத்தில் வில்லனாக நடித்த கருடா யார் தெரியுமா?… பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல் இதோ…!!

AMARA