Newskadai.com
தேர்டு ஐ

அன்லாக் 4.O: மக்களை கொரோனாவுடன் மல்லு கட்ட விட்ட மத்திய அரசு…!!

shop lockdown
Share this:

நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்பார்த்தது போலவே இந்த நான்காம் கட்ட லாக் டவுன் தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இனி லாக் டவுன் என்பது பெயரளவில் மட்டும்தான். தத்தம் பணியிடங்களுக்கு சென்று தங்களது வேலை மற்றும் தொழில்களை செய்வதற்கு இனி மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை. இந்த நான்காம் கட்ட லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து மக்களிடம் இருந்தும் ஒருவித ஆசுவாசம் வெளிப்பட்டு வருகிறது.

கடந்த 5 மாதங்களாக கை கால்களை கட்டி போட்டது போல் வாழ்ந்த மக்கள் இப்பொழுது சுதந்திரம் பெற்றது போல் உணர்கிறார்கள். எதற்காக இந்த ஐந்து மாதங்களாக பல கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டதோ அந்த நோக்கம் வெற்றி பெற்றதா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அரசாங்கங்களின் தற்காப்பு நடவடிக்கை எதுவும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவிடம் தோற்றுப் போய் நிற்கின்றன. இந்த கொரோனா காலத்தில் ஏழைகள் மேலும் ஏழைகளாக வும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும் மாற உதவியது நம்மை ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கை.

நமது மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத தனத்தை இந்த கொரோனா (covid-19) நோய் தொற்று நமக்கு உணர்த்தியது. பல ஆண்டுகளாக வரி செலுத்தியும் நாட்டு மக்களுக்கு இந்த ஐந்து மாதத்தில் பேரிடர் நிவாரண தொகையாக 1,000 ரூபாய்க்கு மேல் வழங்க இயலாத மோசமான நிதி நிலைமை கொண்டஒரு அரசு நமது அரசு என்பதை நமக்கு உணர்த்தியது இந்த கணம். சாதாரண ஒரு வைரஸ் தொற்றில் இருந்து மக்களைக் காக்க முடியாதவர்கள் அந்நிய நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து நம்மை காப்பது என்பது கனவு மட்டுமே. நம்மை ஆள்பவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நமக்கு உணர்த்தியது இந்த கொரோனா. இந்த ஊரடங்கு காலத்தில் நம்மைக் காப்பாற்றியது நமது உறவுகளும் நல்ல உள்ளங்களும் நமது சேமிப்புகளும்தான். மக்களாகிய நாம் இழந்த நம்முடைய தனிமனித பொருளாதாரத்தை மீட்க இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

உழைக்கப் புறப்படும் மக்களே! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்பதால் இந்த ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படவில்லை. அரசாங்கங்களால் கிருமியை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவவும் முடியவில்லை. கொரோனா உடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்ற அளவில் தான் நமக்கு இந்த ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி, முகக்கவசம், தனிநபர் சுகாதாரம், இன்னும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ, அனைத்தையும் மேற்கொண்டு நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். நமது குடும்பங்களையும் நண்பர்களையும் உறவினர்களையும் பாதுகாப்போம்.


Share this:

Related posts

சிறுகதை : அசுரப்படை – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

மாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…!!

POONKUZHALI

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

“தல” தோனி திடீர் ஓய்வை அறிவிக்க காரணம் இவர்களா?… பரபரப்பு பின்னணி…!!

MANIMARAN M

மற்றொரு போபால் பேரழிவுக்கு திட்டமிடுகிறதா மத்திய அரசு?… கந்த சஷ்டி மடை மாற்றம் இதுக்குத் தானா?

NEWSKADAI